டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தினம்

டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று தங்காலையிலுள்ள டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலையடியில் இடம்பெற்றது.

இந்த நினைவுதின நிகழ்வில் பிரதமரின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.

கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் எளிமையாக இடம்பெற்றது.