பருத்திதுறை – கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய கல் அழுத்தும் இயந்திரத்தினுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.





