தமிழ்த் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் -சாணக்கியன்

சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராசையா சாணக்கியன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று(10) வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. இந்த அரசாங்கத்தில் உள்ள தமிழ் பேசுபவர்கள் இருந்தால் உடன் வெளியேற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

என்னுடைய வேண்டுகோள் யாதெனில் உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் இருந்தால் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன், என்றார்.