வவுனியா தம்பனைச்சோலைப் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் இன்று(18) பொலிஸாரால் மீட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள காணியினை துப்பரவு செய்ய முயன்ற போது அக் காணியில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றினை துப்பரவு செய்யும் போது சேற்றில் புதைந்திருந்த நிலையில் ஆர்பீஜி செல் ஒன்று இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் ஆர்பீஜி செல்லை மீட்டுள்ளதுடன் குறித்த கிணற்றினுள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுடன் தேடுதல் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





