அரசாங்கத்தின் “உங்களுக்கொரு வீடு உங்கள் நகரத்தில்” என்ற திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 100 வீடுகளைக் கொண்ட குடியிருப்பு தொகுதி நாவற்குழியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தன்று இந்த வீட்டுத் திட்ட ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





