யாழ் பல்கலை பெண்கள் விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியது

யாழில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அத்தோடு யாழ் பல்கலைக்கழகத்தின் ராமநாதன் வீதியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் அந்த வீதியால் பயணம் செய்பவர்களும், அப் பிரதேச மக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கோரோனா அச்சம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர.

இதன் காரணமாக விடுதி பூட்டப்பட்டிருக்கும் நிலைமையில் விடுதியில் இருந்த மரங்கள் சில முறிந்து விழுந்துள்ளன.. அத்தோடு விடுதிக்குள் மின்சார இணைப்பும் அறுந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் கொடுத்த வீதியால் பயணம் செய்தவர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.