அரசாங்கத்தினுடைய இயலாமையை மறைக்க நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டினார்.
இன்றைய(05) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சீன முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சீனா துறைமுகங்களில் அதிக முதலீடு செய்கிறது. நாம் மற்றொரு பாகிஸ்தானாக இருக்க விரும்புகிறோமா? நாம் மற்றொரு லாவோஸாக இருக்க விரும்புகிறோமா? நாங்கள் கடன் வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சிங்கள மக்களுக்கு இது தொடர்பான பின் விளைவுகளை கூறவேண்டும்.
நவம்பர் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பேஸ்புக் பதிவுக்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது, என சுட்டிக்காட்டினார்.





