காலி பத்தேகம கிறிஸ்தவ மகளீர் வித்தியாலயத்தில்கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 12 இல் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி கடந்த 25 ஆம் திகதி இறுதியாக பாடசாலைக்கு சென்றுள்ளார். குறித்த மாணவியின் வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த மாணவி உட்பட அவரின் குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த மாணவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்திருந்தார்.





