யாழ் பல்கலை பேராசிரியர்கள் மிகுந்தன், சுரேந்திரன் இருவருக்கும் மூத்த பேராசிரியர் பதவி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தினுடைய பீடாதிபதி பேராசிரியர் ஜி.மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் எஸ்.என்.சுரேந்திரன் ஆகியோருக்கு மூத்த பேராசிரியர்களாக பதவி வழங்க பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்திலேயே இருவருக்கும் இந்த பதவிநிலை வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.