மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று (30) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் 240 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. பி.சி.ஆர் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரி உடன் நேரடித் தொடர்புடைய 8 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் 9 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டவர்கள்.
இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.





