இருப்பதை பாதுகாக்க போகின்றீர்களா? எல்லாவற்றையும் இழக்கப் போகின்றீர்களா?

தற்போது இலங்கை அரசியலமைப்பில் உள்ள விடயங்களைப் பாதுகாக்க முயற்சிசெய்யுங்கள். அதன் பின்னர் மேலதிகமாக கேளுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜெய்சங்கர் அரச தரப்பினரை சந்தித்த பின்னர் கூட்டமைப்பினரை சந்தித்தார். இதன் போது இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை தொடர்பில் பேசப்பட்டது.

இலங்கை அரசு மாகாண சபை முறைமையை இல்லாதாக்கும் எத்தனத்திலேயே உள்ளது என்பதை அரச தரப்பினருடான பேச்சுக்களில் அறிய முடிந்ததாக ஜெய்சங்கர் மறைமுகமாக தெரிவித்தார்.

தற்போதைய அரசியலமைப்பில் உள்ளதை பாதுகாருங்கள் அதன் பின்னர் மேலதிகமாக கேளுங்கள் என ஜெய்சங்கர் கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.