இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – அமைச்சர் சரத் வீரசேகர

இலங்கை ஓர் சுயாதீனமான நாடு என்ற ரீதியில் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியுமே தவிர உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே அமைச்சர் இக் கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.