புதிய சின்னத்தை தேர்வு செய்யும் ரணில்- ஆஷூ மாரசிங்க

ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யானை அல்லது மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியிஸ்தருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில்  பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோன்று, அவர் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தமக்கும் பிரச்சினை உள்ளது.

எனவே விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள முன்வைத்துள்ள பிரேரணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.