நல்லை ஆதீனத்தை சந்தித்தார் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி

யாழ் மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரா இன்றைய தினம்(12) நல்லை ஆதீன கருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழிற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரா பலரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றார். இந் நிலையிலேயே இன்று காலை நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதீன குரு முதல்வரைச் சந்தித்தார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. மேலும் கட்டளைத் தளபதி நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.