இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா மொத்த பாதிப்பில் உலக அளவில் 2ஆவது இடத்துக்கு சென்றுள்ளது இந்தியா.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,69,21,520 ஆக காணப்படுகின்றது. இதில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 64,01,817 பேருக்கு பாதிப்பு உள்ளது.2-வது இடத்தில் பிரேசில் இருந்தது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,91,801 ஆக இருந்தது. இதற்கு அடுத்ததாக 3-வது இடத்தில் நேற்று காலை வரை இந்தியா இருந்தது. அப்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,23,179 ஆக இருந்தது.
பிரேசிலோடு ஒப்பிடுகையில் சுமார் 60,000 பேர் எண்ணிக்கையில் இந்தியா பின் தங்கி இருந்தது இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 76,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,92,550 ஆக அதிகரித்தது. இதனால் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






