பண்டிகைக் காலங்களில் மேல்மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுவதை தவிர்க்குமாறு நாட்டின் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு நூற்றுக்கு குறையாத தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிடின் தற்போது மேல் மாகாணத்தில் காணப்படுவதைப் போன்ற நிலைமை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உருவாகிவிடும்.
எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.





